ETV Bharat / city

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது - காவல் துறைக்கு ஓபிஎஸ் மனு - The monopoly affair

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பன்னீர் செல்வம் மனு அனுப்பியுள்ளார்.

OPS petition  to police commissioner
OPS petition to police commissioner
author img

By

Published : Jun 21, 2022, 5:27 PM IST

Updated : Jun 21, 2022, 7:21 PM IST

சென்னை: அதிமுகவில் கடந்த ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வரும் ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் இறுதியாக சில மாவட்டச் செயலாளர்கள் ஒற்றைத்தலைமை கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது இருந்து அதிமுகவில் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை தேர்ந்து எடுக்கும் விவகாரத்தில் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்து வருகிறது. இதனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பதவிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வானகரத்தில் வரும் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு நடக்கவுள்ளது.
இதற்கிடையே அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தன் கையொப்பமிட்ட மனுவினை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள மனுவில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற் குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் வரும் 23-06-2022 அன்று வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக, கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள், கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை.

இருப்பினும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் 14-06-2022 அன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுக் குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவல் கழக இணை ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.

கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு முன்னறிவிப்பு இல்லாமல் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சில தலைமைக் கழக நிர்வாகிகளால் கூட்டத்தில் முடிவு செய்யப்படாத பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கழகத் தொண்டர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, 18-06-2022 அன்று அதே தலைமைக் கழகத்தில் கட்சித் தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தத் தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து, பொதுக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு என்றும், இதுபோன்ற தருணத்தில் தமிழ்நாட்டின் அரசியல் நிலை குறித்து எம்.ஜி.ஆர். அவர்களும், ஜெயலலிதா அவர்களும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும், அக்கருத்து சிறப்பு அழைப்பாளர்களாக வரும் மூத்த முன்னோடிகளால் கழக வளர்ச்சிக்கு பயன்பட்டது என்றும், இதே மண்டபத்தில் ஜெயலலிதா பலமுறை கழகத்தின் பொதுக் குழுக் கூட்டங்களை நடத்திய போதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டதாகவும், எனவே 'இடமில்லை' என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமா இருக்காது என்றும், கூட்டத்திற்கான பொருள் (Agenda) நிர்ணயம் செய் கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 18-06-2022 அன்று தலைமைக் கழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறின. இதன் காரணமாக கழகத் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதோடு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதனையடுத்து, அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு ட்விட்டர் மூலம் நான் வேண்டுகோள் விடுத்தேன். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம். இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, 23-06-2022அன்று நடைபெறவுள்ள பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்து 19-06-2022 அன்று எழுதியிருந்தேன்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருக்கு நான் கடிதம் இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதிமுக சட்டதிட்ட விதிகளுக்கு மாறாக திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர் பென்ஜமின் மேற்காணும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு பாதுகாப்புகோரி தங்களிடம் விண்ணப்பித்துள்ளார். எங்கள் கழக சட்ட திட்ட விதிகள்படி, சட்ட நடவடிக்கை எடுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது.

குழு மேலும், 23-06-2022 அன்று நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக் கூட்டத்தினை தள்ளி வைக்கலாம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் திருமண மண்டப மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதிச்சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளபடியாலும், பென்ஜமின் அவர்கள் பாதுகாப்புகோரி இருப்பது தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும், அதிமுகவிற்கு எதிரான நடவடிக்கை என்பதாலும், கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டுமென்று தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Jun 21, 2022, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.