அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 32ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், ஓ. பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கற்றுக் கொடுத்த அரசியல் பாடங்களை நினைவில் வைத்து, கட்சியின் வெற்றிக்காக உழைப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
அதனைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், பொதுமக்களும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: தந்தை பெரியார் 46ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை!