ETV Bharat / city

விக்கிரவாண்டியை 'வீரபாண்டி'யாக்கிய ஓபிஎஸ்...! - ஓபிஎஸ் பேட்டி

சென்னை: வள்ளீஸ்வரன் தோட்டத்தில் உள்ள குடிசைமாற்று குடியிருப்புகளைப் பார்வையிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, விக்கிரவாண்டி என்று சொல்லுவதற்குப் பதிலாக 'வீரபாண்டி' என்று மாற்றி பேசியுள்ளார்.

ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு
author img

By

Published : Sep 27, 2019, 1:57 PM IST

Updated : Sep 27, 2019, 3:19 PM IST

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வள்ளீஸ்வரன் தோட்டம் குடிசைமாற்று குடியிருப்பில் உள்ள வீடுகள் பழுதடைந்து நிலையில் காணப்படுவதால், இதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட அரசு முடிவு எடுத்ததுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், இப்பகுதியிலுள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தரப்படவுள்ளதாகவும் 200 சதுரஅடி உள்ள வீடுகளை இடித்து 400 சதுரஅடி உள்ள புதிய வீடுகளாக கட்ட ரூ. 69 கோடி ஒதுக்கப்பட்டு ஓராண்டிற்குள் கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் வெளியில் தங்கியிருக்கும் காலத்தில் குடும்பத்திற்கு 8000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "2023 தொலைநோக்குத் திட்டத்தின்படி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் 75 ஆயிரம் கோடி அளவிற்கு மக்களுக்கு தரமான வீடுகள் கட்டப்பட்டுவருகிறது. இதுவரை ஆறு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன" என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் இடைத்தேர்தல் குறித்த கேள்வி ஒன்றுக்கு, விக்கிரவாண்டித் தொகுதியை என்று சொல்வதற்கு பதிலாக 'வீரபாண்டி' என மாற்றிப் பேசினார். பின்னர் அதனைத் திருத்திப் பேசாமல் அப்படியே பேச்சைத் தொடர்ந்த அவர், நாங்குநேரி தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல இயக்கங்கள், கட்சிகளிடம் ஆதரவை கேட்டுள்ளோம்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பாஜக கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

இதையும் படியுங்க:

ஸ்டாலினின் உளறல் உச்சத்திற்கு சென்றுவிட்டது: பி.சி. அன்பழகன்

"ஆறுமுகசாமி ஆணையம் என்பது ஒரு அரசியல் நாடகம்" - ஓபிஎஸ்ஸை வம்பிழுத்த டிடிவி தினகரன்!

Intro:Body:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வள்ளீஸ்வரன் தோட்டத்தில் உள்ள குடிசை மாற்று குடியிருப்புகளுக்கான புதிய கட்டிடங்கள் இன்னும் ஒரு வருட காலத்தில் கட்டித்தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வள்ளீஸ்வரன் தோட்டம் குடிசை மாற்று குடியிருப்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் கடந்த 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதால் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. ஆகவே இதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு எடுத்தது. அதன்படி இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன. இங்கு மொத்தமாக உள்ள 586 குடியிருப்புகளில் 488 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. புதிய குடியிருப்புகள் கட்ட தற்போது வசிப்பவர்களிடம் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை தர வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு இந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழு மானியம் வழங்கி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டு இந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்து உள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தரப்பட உள்ளதாகவும், 200 சதுர அடி உள்ள வீடுகளை இடித்து 400 சதுர அடி வீடுகளாகவும் கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

ஒரு மாத காலத்துக்குள் தற்போது உள்ள குடியிருப்புகள் இடிக்கப்படும் என்றும் புதிய வீடுகள் கட்ட ₹69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய வீடுகள் ஓராண்டிற்குள் கட்டித்தரப்படும் எனவும் அவர் கூறினார்.

அவர்கள் வெளியில் தங்கியிருக்கும் காலத்தில் 8000 ரூபாய் குடும்பத்திற்கு வழங்கப்படும்.

ஒரு மாதத்திற்குள் வீடுகள் இடிக்கப்பட்டு இங்குள்ள மக்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் 2013 தொலைநோக்குத் திட்டத்தின் படி 75,000 கோடி அளவிற்கு குடிசைப்பகுதி மக்களுக்கு தரமான வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இதுவரை 6 லட்சம் வீடுகள் புதிய தரமான கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.

அனைத்து ஏழை மக்களுக்கும் 2023 ககுள் வீடுகள் வழங்கப்பட்டுவிடும்.

விக்ரவாண்டி நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டார்கள். ஆதரவு தரும் இயக்கங்கள், கட்சிகளிடம் ஆதரவை கேட்டுள்ளோம்.
உறுதியாக அனைவரும் ஆதரவளிப்பார்கள்.

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோகவெற்றி பெறும் என தெரிவித்தார்.

பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார். Conclusion:
Last Updated : Sep 27, 2019, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.