உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் பொதுமக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திவருகிறது. அதன்படி, பள்ளி - கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரையும் ஒத்திவைக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடன், எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன. ஆனால், இதற்கு சபாநாயகர் செவி சாய்க்காததால் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இன்று முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
திமுகவைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க திமுக முடிவு