ETV Bharat / city

எதிர்க்கட்சியோ ஆளும் கட்சியோ எப்போதும் உங்களில் ஒருவன் நான் முதலமைச்சர் ஸ்டாலின் - stalin speech

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில், ரூ.17.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 130 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டி, மறுகுடியமர்வு செய்யவுள்ள 128 குடியிருப்புதாரர்களுக்கு ரூ.20.48 இலட்சம் கருணைத் தொகையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Jun 11, 2022, 10:46 PM IST

Updated : Jun 11, 2022, 11:07 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) , கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஜமாலியா லேன் திட்டப்பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.17.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 130 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இதே கொளத்தூர் தொகுதியிலிருந்து நான் மூன்று முறை உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், இந்த தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றி இருக்கிறேன். இப்பொழுது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு இந்தத் தொகுதியில் பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீங்கள் இல்லை என்றால், நான் இல்லை: இந்த இரண்டையும் நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை, இரண்டையும் ஒன்றாகத்தான் நான் கருதுகிறேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எப்போதும் உங்களில் ஒருவனாக இருக்கக்கூடியவன். இந்தக் கொளத்தூர் தொகுதிக்கு வருகிறபோது இன்னும் அதிகமான அளவிற்கு எனக்கு பெருமை, சிறப்பு, வரவேற்பு கிடைக்கிறது என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் அதைவிட எனக்கு ஒரு மன திருப்தி ஏற்படுகிறது என்பதை நான் இங்கு சொல்லித்தான் தீரவேண்டும்.

கட்சி முன்னோடிகளுக்கு 328 பேர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பொற்கிழி வழங்கப்படுகிறது. அந்த பொற்கிழி வழங்கப்படுகிற காரணத்தால், அதை பெறக்கூடியவர்கள் ஏதோ நீங்கள் ஆற்றிய பணிகளுக்கு கைமாறு செய்கிறோம் என்று நீங்கள் கருதவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உழைப்பிற்கு, உங்கள் தியாகத்திற்கு, நீங்கள் இல்லையென்றால் நான் முதலமைச்சராக இல்லை, நீங்கள் இல்லையென்றால், மேயர் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. ஏன் இந்தக் கட்சியே இல்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

வேருக்கு மேலே தான் மரம் வருகிறது, கிளைகள் வருகிறது, இலைகள் வருகிறது, பழங்கள் வருகிறது, காய், கனிகள் வருகிறது. ஆனால் அந்த வேர் கண்ணுக்குத் தெரியாது பூமிக்கு அடியில் இருக்கும். அது மாதிரி தான் நீங்கள். கண்ணுக்குத் தெரியமாட்டீர்கள். ஆகவே அந்த வேருக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இன்னும் உறுதியாக இருக்கும். ஆகவே, உங்களுக்கு வழங்கப்படுகிறது என்றால், உங்களுக்கு பெருமைப்படுத்துவதற்காக மட்டுமல்ல, உங்களுக்கு வழங்கி நாங்களும் அதில் பெருமைப்பட வேண்டும்.

கல்விக்கும் மருத்துவத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு: நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரை எல்லாத் திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருந்தாலும், எல்லாத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை நாம் செய்து கொண்டிருந்தாலும், கல்விக்கும் மருத்துவத்துக்கும் நாம் அதிகமான அளவிற்கு அக்கறை செலுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நீட் என்கிற தேர்வு எழுதினால் தான் மருத்துவப் படிப்பை தொட முடியும் என்ற ஆபத்தான ஒரு நிலை.

ஆகவே, இந்த நீட் உடனே அகற்றப்படவேண்டும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அதற்கு விலக்கு அளித்திட வேண்டும் என்று நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம், குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நம்முடைய தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கிறார்கள்.

அதில், முதலில் அரியலூர் பகுதியைச் சார்ந்த பட்டியிலன சமுதாயத்தைச் சார்ந்த அனிதா என்கிற சகோதரி, பள்ளி தேர்வில் அதிகமான அளவிற்கு மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட் தேர்வு வருகிற காரணத்தால் அந்த சகோதரி எண்ணிக்கொண்டிருந்த கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அதிர்ச்சிக்கு ஆளாகி அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி உங்களுக்கு எல்லாம் தெரியும்.

அதனால் தான் முதலில் நாம் அந்த மாணவிகளுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய கொளத்தூர் தொகுதியில் அனிதா என்கிற பெயரிலேயே 'அச்சீவர்ஸ் அகாடமி' என்ற அமைப்பை ஏற்படுத்தி அவர்கள் படிப்பிற்கு, தகுந்த வேலையை பெற வேண்டும் என்பதற்காக பயிற்சிகளை நாம் கடந்த சில ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கும்.

ஆகவே திமுக பொறுத்த வரை, ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும், மக்களுக்காக ஏழை, எளியவர்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்காக, பாடுபடக்கூடிய ஒரு இயக்கம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக பாஜகவின் பி டீம் இல்ல... அவங்கதான் மெயின் டீம் - சீமான்

Last Updated : Jun 11, 2022, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.