தமிழ்நாடு சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு சட்டத்தை ரத்து செய்துவிட்டன.
இதற்கு இடைக்கால தடை பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தோம். சட்டத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இளைஞர்களை சீரழித்துவரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக உடனடி சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாடு அரசு வழக்கரிஞர்களிடம் ஆலோசித்து, ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அனுகியுள்ளோம். ஏழை எளிய மக்களை ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அம்மா உணவகத்தை மூடினால் என்ன? என துரைமுருகன் கேட்டது மனவேதனை...!'