ETV Bharat / city

‘ஆபரேஷன் நம்பர் பிளேட்’ அதிரடி சோதனையில் இறங்கிய ரயில்வே காவல் படை...!

author img

By

Published : Aug 15, 2019, 8:43 AM IST

Updated : Aug 15, 2019, 9:36 AM IST

சென்னை: ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் சுதந்திர தினத்தை முன்னிட்டு 'ஆபரேஷன் நம்பர் பிளேட்' என்ற சோதனையை நடத்தி வருகின்றனர்.

ஆப்ரேஷன் நம்பர் பிலேட்

நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 12 ஆயிரம் காவல்துறையினர் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ‘ஆபரேஷன் நம்பர் பிளேட்’ என்ற ஒரு அதிரடி ஆபரேஷனை தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் நாட்டில் உள்ள பெரிய ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மோகன் பேட்டி

இந்த வாகன நிறுத்தத்தில், கேட்பாரற்று நீண்ட நாட்களாக இருக்கும் இருசக்கர வாகனங்கள் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள். மேலும், இருசக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ அவற்றின் பதிவு எண் சரியாக இருக்கிறதா அல்லது போலியான பதிவு எண்ணா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். அப்போது குற்ற நடவடிக்கைகள் அல்லது குற்றச்செயல்களில் உள்ள வாகனங்கள் இருந்தால், அது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் சார்பில் தெரிவிக்கப்படும்.

சென்னையை பொறுத்தவரை சென்ட்ரல், எழும்பூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய முக்கியமான ரயில் நிலையங்களிலிருந்து கிட்டத்தட்ட 228 கேட்பாரற்ற வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு இருப்பது இந்த ஆபரேஷன் மூலம் தெரியவந்தது. தற்போது அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:nullBody:ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சுதந்திர தினத்தை முன்னிட்டு ' ஆபரேஷன் நம்பர் பிளேட் ' என்ற ஆபரேஷனை தொடங்கி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

ரயில்வே பாதுகாப்பு படையினர் இது தொடர்பாக இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

நாட்டின் 73 வது சுதந்திர தினம் நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.இதை முன்னிட்டு காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 12000 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆபரேஷன் நம்பர் பிளேட் என்ற ஒரு அதிரடி ஆபரேஷனை தொடங்கியிருக்கிறார்கள்

இதன் மூலம் நாட்டில் உள்ள பெரிய ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன

இந்த வாகன நிறுத்ததில் கேட்பாரற்று நீண்ட நாட்களாக நிற்கும் இருசக்கர வாகனங்கள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்துவார்கள் மேலும் இருசக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ அவற்றின் பதிவு எண் சரியாக இருக்கிறதா அல்லது போலியான பதிவு என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்

இந்த விசாரணையின்போது குற்ற நடவடிக்கைகள் அல்லது குற்றச்செயல்களில் குற்ற வழக்குகள் இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் இருந்தால் அது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் தெரிவிக்கப்படும்

சென்னை பொருத்தவரை சென்னை சென்ட்ரல் எக்மோர் பல்லாவரம் தாம்பரம் ஆகிய முக்கியமான ரயில் நிலையங்களில் இருந்து கிட்டத்தட்ட 228 கேட்பாரற்ற வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு இருப்பது இந்த ஆபரேஷன் மூலம் தெரிய வந்தது தற்போது அதுகுறித்து தீவிர விசாரணையில் நடத்தி வருகின்றனர்

இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்

பேட்டி : மோகன் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர்Conclusion:null
Last Updated : Aug 15, 2019, 9:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.