ETV Bharat / city

கரோனா ஓயவில்லை; பள்ளிகள் திறப்பு சரியான முடிவல்ல! - அன்புமணி ராமதாஸ்

கரோனா பரவல் இன்னும் ஓயாத நிலையில் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

anbumani
anbumani
author img

By

Published : Jan 12, 2021, 3:45 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 19 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த முடிவு என்றாலும்கூட, நோய்த்தடுப்பு கோணத்தில் சரியான முடிவல்ல. அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

கடந்த 9 மாதங்களாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், பிற முன்களப்பணியாளர்கள் ஆகியோரின் கடும் உழைப்பால் தமிழ்நாட்டில் கரோனா பரவல் தற்போது தான் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும், கரோனா வைரஸ் பரவல் இன்னும் முற்றிலுமாக ஓயவில்லை. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் கூட கரோனா வைரஸ் முன்பை விட வேகமாக பரவும் ஆபத்துள்ளது.

அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது உண்மை என்றாலும், அங்கெல்லாம் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதும் மறுக்க முடியாத உண்மை. கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட கடந்த ஒரு வாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. இதற்கு முன் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவிலும் இதே நிலைதான். சென்னையிலும் கூட ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும் இதற்கு தப்பவில்லை.

இத்தகைய சூழலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, மாணவர்கள் தொடர்ந்து 3 மணி நேரம் வரை நெருக்கமாக அமர்ந்திருக்கும் போது கரோனா தொற்ற வாய்ப்புகள் உள்ளன. கழிப்பறைகள் தான் கரோனா பரவலுக்கு முதன்மை காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் போது ஆபத்துகள் அதிகமுள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு எடுத்திருக்கக் கூடாது.

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்கள் மூலமாக வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் பரவக்கூடும். இதேநிலை தொடர்ந்தால் அடுத்த சில வாரங்களில் தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும். கல்வியை விட குழந்தைகளின் உயிர் மிகவும் முக்கியம். எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்புகள் ஜன. 19 திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.