ETV Bharat / city

சென்னையில் சிசிடிவி கேமராக்களுக்கான கண்காணிப்பு அறை திறப்பு - Chennai Police Commissioner Shankar Jiwal

மாதவரத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி, ஏஎன்பிஆர் கேமராக்களை கண்காணிக்கும் காவல் கண்காணிப்பு நிலையத்தை, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று திறந்து வைத்தார்.

கண்காணிப்பு அறை திறப்பு
கண்காணிப்பு அறை திறப்பு
author img

By

Published : Jul 1, 2021, 7:50 PM IST

சென்னை: வடசென்னையின் முக்கியப் போக்குவரத்து சந்திப்பான ஜி.என்.டி, கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த காவல் உதவி மையம், 2010ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் குறை தீர்க்கும் இடமாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது பெருகி வரும் வாகனப்போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, சிசிடிவி, ஏஎன்பிஆர் கேமராக்களை கண்காணிக்கும் நவீன காவல் கண்காணிப்பு நிலையமாக மாற்றம் செய்து புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது.

இதனை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஜூலை 1) திறந்து வைத்தார். இந்த மையத்தில் மாதவரம் பகுதியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் கண்காணிக்கப்படுகின்றன. மொத்தமாக 60க்கும் மேற்பட்ட சிசிடிவி, 4 ஏஎன்பிஆர் (Automatic number-plate recognition) கேமராக்கள் ஆகியவை இங்கு கண்காணிக்கப்பட இருக்கின்றன.

இந்நிகழ்வில் சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையர் துரை குமார், துணை ஆணையர் டாக்டர்.பிரதீப் குமார், மாதவரம் போக்குவரத்து உதவி ஆணையர் மலைசாமி, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் போக்குவரத்து ஒழுங்குப் பணியின்போது பயன்படுத்தக்கூடிய 8 வகை பாதுகாப்பு உபகரணங்களும் நிகழ்வில் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: திங்கள் முதல் செரோ சர்வே தொடங்கப்படும் - சென்னை மாநகராட்சி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.