சென்னை: எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலை பட்டப்படிப்பில் சேருவது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,“2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில், எம்பிஏ, எம்சிஏ முதுகலை பட்டப்படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .
அதேபோல் அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்பட இதர பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ முதுகலை பட்டப்படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் www.gct.ac.in,www.tn-mbamca.com ஆகிய இணையதளத்தின் மூலம் தேவையான அசல் சான்றிதழ்களுடன் இன்று(ஆகஸ்ட்11) முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
இந்தக் கல்வியாண்டில் எம்பிஏ எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகள் சான்றிதழ் சரிபார்ப்பு கல்லூரிகளை தேர்வு செய்தல் தற்காலிக மற்றும் ஒதுக்கீட்டு ஆணை ஆகிய அனைத்தும் இணையதளம் மூலம் மட்டுமே நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்