ETV Bharat / city

நளினிக்கு ஒரு மாதம் பரோல் - தமிழ்நாடு அரசு முடிவு

author img

By

Published : Dec 23, 2021, 12:38 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

நளினிக்கு ஒரு மாதம் பரோல்
Nalini parole

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிடக் கோரி அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

அதில், 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கக்கோரி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அது தற்போதுவரை நிலுவையில் உள்ளது.

நளினி தாயார் வழக்கு

இந்நிலையில், தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கேட்டு, கடந்த மே, ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாடு உள் துறைச் செயலருக்கு மனு அனுப்பப்பட்டது. அதன் மீது எந்த முடிவும் எடுக்காததால் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது குறித்து நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர். ஹேமலதா அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பத்மாவின் மனு அரசின் பரிசீலனையில் உள்ளதால், அது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க ஏதுவாக வழக்கைத் தள்ளிவைக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு பதில்

இதையடுத்து வழக்கு இன்று (டிசம்பர் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் பத்மா சார்பில் தெரிவிக்கப்பட்டதால், வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நளினியின் பிணை மனு மீதான வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.