இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
'போக்குவரத்துத் துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் கடந்த 11ஆம் தேதி இரவு வரை, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,225 பேருந்துகளும், 574 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 378 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 795 பயணிகள் பயணித்துள்ளனர்.
மேலும் இது வரை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 456 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவின் மூலம் வருவாய் 9 கோடியே 12 லட்சம் ஈட்டப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: ஆம்னி பேருந்தில் அதிக தொகை வசூலித்தால் அழையுங்கள் இந்த எண்ணுக்கு!