சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மருத்துவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தெரிவித்ததாவது,
- பத்து ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருக்கும் டி.ஏ.சி.பி.யில் (DACP) உள்ள சம்பள குறைவை திருத்தம் செய்ய வேண்டும்
- நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்
- அரசு பிஜி பட்டப்படிப்பு மருத்துவர்களுக்கு நேரடி கலந்தாய்வு நடத்த வேண்டும்
- கிராம மருத்துவ சேவை செய்த அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி முதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.