ETV Bharat / city

காவல் அருங்காட்சியகமாகும் பழைய காவல் ஆணையரகம்! - சென்னை காவல் ஆணையர் அலுவலகம்

சென்னை: 178 ஆண்டுகள் பழமையான பழைய காவல் ஆணையர் அலுவலக கட்டடத்தை காவல் அருங்காட்சியமாக மாற்றி ஆறு மாதத்தில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

office
office
author img

By

Published : Oct 20, 2020, 9:33 PM IST

கடந்த 1842 ஆம் ஆண்டு எழும்பூர் பாந்தியன் சாலையில் நிலம் ஒன்றை வாங்கிய அருணகிரி முதலியார் என்பவர், அங்கு சொகுசு பங்களாவை கட்டியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த பங்களா மதராஸ் மாகாண காவல் ஆணையர் தலைமையகமாக வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.

1856 இல் மாகாணத்தின் முதல் காவல் ஆணையரான லெப்டினட் கர்னல் போல்டர்சன் என்பவர், இந்த சொகுசு பங்களாவை அருணகிரி முதலியாரிடமிருந்து மாநகர காவல்துறைக்காகவே, 21 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

அன்றிலிருந்து பல திறமையான காவல் அலுவலர்கள் இச்சிறப்பு மிக்க அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

அப்படிப்பட்ட இந்த அலுவலகத்திலிருந்து போதிய இடவசதியின்மை, நவீனமாக்கல் உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த 2013 ஆம் ஆண்டு, காவல் ஆணையர் அலுவலகம் வேப்பேரியில் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

எழும்பூரில் இருந்த அலுவலகத்தில் கடைசியாக ஜார்ஜ், காவல் ஆணையராக பணியாற்றினார். அதன் பின்னர் பழமை வாய்ந்த இந்த கட்டடத்தை புனரமைத்து அருங்காட்சியமாக மாற்ற தற்போதைய டிஜிபியான திரிபாதி அனுமதியளித்தார்.

அதனடிப்படையில் சுமார் 4 கோடி செலவில், கடந்த இரண்டு மாதங்களாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

178 ஆண்டுகள் பழமையான கட்டடம் என்பதால், அதன் எழில் மாறாத வகையில் பழைய முறையிலான சுண்ணாம்பு, கருப்பட்டி மற்றும் கடுக்காய் கொண்டு புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக நாட்டு விடுதலைக்கு முன்பும், பின்புமான எழும்பூர் காவல் ஆணையர் அலுவலக அறிக்கைகள், உத்தரவுகள், சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், விருதுகள் மற்றும் அப்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை சேகரித்து, அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான வேலைகளும் நடக்கின்றன.

காவல் அருங்காட்சியகமாகும் பழைய காவல் ஆணையரகம்!

36 ஆயிரம் சதுர அடியில் அமையவுள்ள இந்த அருங்காட்சியகத்தில், வான்படை, கப்பற்படை, இராணுவம் ஆகிய முப்படைகளிலும் பயன்படுத்தப்பட்ட பழமையான ஆயுதங்கள், ராக்கெட்டுகள் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த புனரமைப்புப் பணிகளை டிஜிபி திரிபாதி, மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் அடிக்கடி பார்வையிட்டு வருகின்றனர்.

இன்னும் 6 மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, அதன் பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு இந்த காவல் அருங்காட்சியகம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு மேலும் ஒரு அடையாளமாக விளங்கவிருக்கும் இதனை காண மக்களும் ஆவலுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: காவலர் வீரவணக்க நாள்: நினைவுருவ கற்சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.