ETV Bharat / city

ஆயில் கூடினால் ஆயுளுக்கு ஆபத்து - தமிழிசை - சித்த மருத்துவ விழா

சென்னை: உணவில் ஆயில் கூடினால், ஆயுளுக்கு ஆபத்து என்று தெலங்கானா ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Oil poses a risk to life says Telangana Governer Tamilisai Soundararajan
Oil poses a risk to life says Telangana Governer Tamilisai Soundararajan
author img

By

Published : Jan 13, 2020, 4:35 PM IST

அகத்தியரின் பிறந்த நாளான மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அமையும் நாள் ஒவ்வொரு ஆண்டும், “சித்த மருத்துவ திருநாளாக” கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் மூன்றாவது சித்த மருத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோநாயக், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில், தமிழிசை மற்றும் ஸ்ரீபத் யசோநாயக் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்து சித்த மருத்துவ திருநாள் சிறப்பு மலர் மற்றும் ஆய்வு புத்தகங்களை வெளியிட்டனர்.

விழாவில் தமிழிசை கூறியதாவது:

ஆரோக்கியமான தமிழகத்திற்கு ஆளுநராக மட்டுமல்லாமல் அக்காவாக வர வேண்டும் என நினைத்தேன். அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை ஆளுநர் என்று சொல்வதை விட வழக்கம்போல் அக்கா என்றே அழைக்கலாம்.

எனது சொந்த ஊரின் பெயர் அகஸ்தீஸ்வரம் என்பதால் இவ்விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் ஆங்கில மருத்துவம் படித்திருந்தாலும், சித்த மருத்துவம்தான் எனக்கு பிடித்தது.

சித்த மருத்துவம் என்பது நோயே இல்லாமல் வாழ்வதற்கானது, இளமையாக வாழ இதில் வழி இருக்கிறது. அந்தக் காலத்திலேயே ஹேர் டையை நம் முன்னோர்கள் சித்த மருத்துவ முறையில் உருவாக்கியுள்ளார்கள்.

ஆயில் கூடினால் ஆயுளுக்கு ஆபத்து: ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

நான் தெலங்கானாவில் ஆளுநர் மாளிகையில் மூலிகை தோட்டம் ஒன்றை உருவாக்கியதே எனது முதல் வேலை. யோகாவை கட்டாயமாக்கி ராஜ் பவனில் உள்ள அனைவரையும் யோகா கற்க வைத்துள்ளேன்.

பதவி ஏற்ற அடுத்த நாள் டெங்கு காய்ச்சல் செய்திகள் மனதிற்கு வேதனை அளித்தது. அதனால் அந்த அரசை அழைத்து டெங்குவை சென்னையில் கட்டுப்படுத்தும் விதம் போன்று தெலங்கானாவில் 15 தகவல்களாக அரசுக்கு சமர்ப்பித்தேன்.

அதில் நிலவேம்பு கசாயம் என்பது முக்கியமான ஒன்றாகும். தமிழர்கள் எங்கு சென்றாலும் நல்ல விஷயங்களை செல்லும் இடங்களில் அனைவரும் பயன்பட வழங்குவது வழக்கம்.

மகப்பேறு சஞ்சீவினி என்கிற கிட் ஒன்றை தமிழக அரசு வழங்குகிறது. நரேந்திர மோடி அரசாங்கம் ஜூன் 21ஆம் தேதியை யோகா தினமாக அறிவித்துள்ளது.

இஸ்லாமிய நாடுகளும் பின்பற்றுகின்றன. நம் பாரம்பரிய உணவுகளை நாம் மறந்துவிட்டோம். தாய்ப்பால் கொடுத்தால் இளமை கெட்டுவிடும் என தவறாக நினைக்கின்றனர்.

ஆனால் தாய்ப்பால் கொடுத்தால்தான் இளமையாக இருக்க முடியும். கசப்பு உணவு என்பது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும், சர்க்கரை நோய் வராது.

பாஸ்ட் புட், மிக்ஸ்ட் ரைஸ் (கலவை சாதம்) எனச் சாப்பிட்டுவதன் மூலம் நம் ஆயுளை நாம் குறைத்துக்கொள்கிறோம். உப்பு அதிகம் சாப்பிட்டால் சொரணை குறைந்து விடும்.

சித்த மருத்துவர்களின் ஆராய்ச்சி இன்னும் விரிவுபடுத்தப்பட்டு அது மக்களுக்கு சென்றடைய வேண்டும். இஞ்சி இடுப்பழகி ஆக வேண்டும் என்றால், இஞ்சி சாப்பிட்டாக வேண்டும்.

அதை விட்டு அமெரிக்கர்கள் எழுதிக் கொடுப்பதை நாம் பின்பற்றுகிறோம். மிகவும் அவசர நிலை காலத்தில் அதற்கான மருத்துவத்தைதான் பயன்படுத்த வேண்டும். சித்த மருத்துவமும், ஆங்கில மருத்துவமும் இணைந்து சில நோய்களை குணப்படுத்தலாம் என்றார்.

Intro:Body:
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 13.01.20

இஞ்சி இடுப்பழகியாக வேண்டும் என்றால், இஞ்சி சாப்பிட்டாக வேண்டும்; தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கலகலப்பான பேச்சு...

தொல் தமிழுலகு போற்றும் மருத்துவ வளமாம் சித்த மருத்துவம் நன் அன்றாட உணவியல், வாழ்வியல், உளவியல் சார்பாக நலம் காப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இம்மருத்துவத்தின் தலைசிறந்த சித்தராம் அகத்திய பெருமானின் பிறந்த நாளான மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று "சித்த மருத்துவத் திருநாளாக" ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் மூன்றாவது சித்த மருத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோநாயக், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில், தமிழிசை மற்றும் ஸ்ரீபத் யசோநாயக் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்து சித்த மருத்துவ திருநாள் சிறப்பு மலர் மற்றும் ஆய்வு புத்தகங்களை வெளியிட்டனர்.

விழாவில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை,

ஆரோக்கியமான தமிழகத்திற்கு ஆளுநராக மட்டுமல்லாமல் அக்காவாக வர வேண்டும் என நினைத்தேன். அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை ஆளுநர் என்று சொல்வதை விட வழக்கம்போல் அக்கா என்றே அழைக்கலாம். எனது சொந்த ஊரின் பெயர் அகஸ்தீஸ்வரம் என்பதால் இவ்விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் ஆங்கில மருத்துவம் படித்திருந்தாலும், சித்த மருத்துவம் தான் எனக்கு பிடித்தது. சித்த மருத்துவம் என்பது நோயே இல்லாமல் வாழ்வதற்கானது, இளமையாக வாழ இதில் வழி இருக்கிறது. அந்தக் காலத்திலேயே ஹேர் டையை நம் முன்னோர்கள் சித்த மருத்துவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.. நான் தெலுங்கானா வில் மூலிகை தோட்டம் ஒன்றை உருவாக்கியது எனது முதல் வேளை. யோகாவை கட்டாயமாக்கி ராஜ் பவனில் உள்ள அனைவரையும் யோக கற்க வைத்துள்ளேன். பதவி ஏற்றுவிட்டு அடுத்த நாள் டெங்கு காய்ச்சல் செய்திகள் மனதிற்கு வேதனை அளித்தது. அதனால் அந்த அரசை அழைத்து டெங்குவை சென்னையில் கட்டுப்படுத்தும் விதம் போன்று தெலுங்கானாவில் 15 தகவல்களாக அர்சுக்கு சமர்பித்தேன். அதில் முக்கியமாக ஒன்று நிலவேம்பு கசாயம் என்பது முக்கியம். தமிழர்கள் எங்கு சென்றாலும் நல்ல விசயங்களை நாம் செல்லும் இடங்களில் அனைவரும் பயன்பட வழங்குவது வழக்கம். மகப்பேறு சஞ்சீவினி என்கிற கிட் ஒன்றை தமிழக அரசு வழங்குகிறது. மோடி அவர்களின் அரசு ஜூன் 21 ம் தேதியை யோகா தினமாக அறிவித்துள்ளார். இஸ்லாமிய நாடுகளும் அதனை பின்பற்றுகிறது. நம் பாரம்பரிய உணவுகளை நாம் மறந்துவிட்டோம். தாய்பால் கொடுத்தால் இளமை கொட்டுவிடும் என தவறாக நினைத்தார்கள், ஆனால் தாய்பால் கொடுத்தால் தான் இளமையாக இருக்க முடியும். கசப்பு உணவு என்பது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும், சர்கரை நோய் வராது. பாஸ்ட் புட், மிக்செட் ரைஸ் எனச் சாப்பிட்டு நம் ஆயுளை நாம் குறைத்துக்கொள்கிறோம். உப்பு அதிகம் சாப்பிட்டால் சொரணை குறைந்து விடும். சித்த மருத்துவர்களின் ஆராய்ச்சி இன்னும் விரிவுபடுத்தப்பட்டு அது மக்களுக்கு சென்றடைய வேண்டும். இஞ்சி இடுப்பழகி ஆக வேண்டும் என்றால், இஞ்சி சாப்பிட்டாக வேண்டும். அதை விட்டு அமெரிக்கா காரன் எழுதிக் கொடுப்பதை நாம் பின்பற்றுகிறோம். மிகவும் அவசர நிலை காலத்தில் அதற்கான மருத்துவத்தைதான் பயன்படுத்த வேண்டும். சித்த மருத்துவமும், ஆங்கில மருத்துவமும் இணைந்து சில நோய்களை குணப்படுத்தலாம்... என்றார்..

ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோநாயக் பேசுகையில்,

ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு மருத்துவ துறைகளை உள்ளடக்கியுள்ளது. தேசிய மருத்துவ கொள்கை 2017 படி மருத்துவக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதம மந்திரி ஆரோக்ய யோஜனா மூலம் பல்வேறு சித்த மருத்துவங்களை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்த உள்ளது. சித்த மருத்துவ வழியில் மருத்துவம் மேற்கொள்ளும் போது, மனிதர்கள், நோயற்ற வாழ்வை பெருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ் அமைச்சகத்தால் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழகத்தில் தாம்பரதில் தேசிய அளவிலான லேபரட்டரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய சித்தா கொள்கைப்படி இக்கல்வியை உலக அளவிலான தரத்திற்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. புதிய கல்வித் திட்டங்கள் குறிப்பாக, முனைவர் பட்டப்படிப்பிற்கு அதிகமானோர் தகுதிபெறும் அளவிற்கு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. சித்த மருத்துவத்தினால் மட்டுமே டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொடிய நோய்களை கட்டுப்படுத்த முடிகிறது என்றார்...

அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,
மிகுந்த அளுமை மிகுந்த பெண்மணி தான் தமிழிசை அவர்கள். அவரது தெலுங்கானா அலுவலகத்தில் கூட சித்த மருத்துவம் குறித்து பல்வேறு தாவரங்கள் வைத்துள்ளார். தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் படியான நல்ல செயல்களை தெலுங்கானாவில் செய்து வருகிறார். தமிழகம் என்பது ஒரு கேம் சேஞ்சராக இருக்கிறது. 100 கோடியை ஒதுக்கி யோகா மற்றும் நேச்சிரோபதிக்கு முதல்வர் ஒதுக்கியுள்ளார். நிலவேம்பு குடிநீர் தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. 11 சித்த மருந்துகள் அடங்கிய பெட்டகம் மகப்பேறு சஞ்சீவியும் மகப்பேறு காலத்தில் தமிழக மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. அனைவரும் ஒன்றாக இருந்து சித்த மருத்துவத்தை காக்க பாடுபடுவோம். வான் உள்ள வரை சித்த மருத்துவம் நிலைத்து இருக்க அரசு உதவியாக இருக்கும் என்றார்..

tn_che_03_sidhdha_medicine_day_tamilisai_speech_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.