1.மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.26) ஆலோசனை நடத்துகிறார்.
2.பாரதிதாசன் கல்லூரியில் கலந்தாய்வு
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதல்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக்.26) தொடங்கி, நவம்பர் 8ஆம் தேதி வரை நடக்கிறது.
3.தமிழ்நாட்டில் இன்று மிதமழை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், இன்று (அக்.26) மிதமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4.பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரெஞ்சு பேட்மிண்டன் போட்டி இன்று (அக்.26) தொடங்குகிறது. இந்தத் தொடரில் முதல் சுற்றில் பிவி சிந்து, டென்மார்க்கின் ஜூலி டாவல் ஜேக்கப்சனை எதிர்கொள்கிறார்.