ETV Bharat / city

கரோனா நோயாளிகளுக்கான உணவுப் பட்டியல்! - கரோனா நோயாளி

சென்னை: அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

food
food
author img

By

Published : Apr 23, 2020, 12:52 PM IST

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் நிரம்பிய உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.

  • காலை 7 மணிக்கு - இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கின்றனர்.
  • காலை 8.30 மணிக்கு - 2 இட்லி, சாம்பார், வெங்காயச் சட்னி, சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி, 2 வேகவைத்த முட்டை மற்றும் பால் வழங்கப்படுகின்றன.
  • காலை 10.30 மணிக்கு - சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்படுகிறது.
  • மதியம் 12 மணிக்ககு - வெள்ளரிக்காய் சாலட் மற்றும் இஞ்சியை தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டித் தருகின்றனர்.
  • மதியம் 1.30 மணிக்கு - 2 சப்பாத்தியுடன் புதினா சாதம் அல்லது வெஜிடபிள் சாதம், வேகவைத்த காய்கறிகள், கீரை, மிளகு ரசம், உடைத்த கடலை வழங்கப்படுகிறது.
  • மாலை 3 மணிக்ககு - மிளகு, மஞ்சளுடன் உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரும் வழங்கப்படுகிறது.
  • மாலை 5 மணிக்கு - பருப்பு சூப், சுண்டல் கொடுக்கின்றனர்.
  • இரவு 7 மணிக்கு - 2 சப்பாத்தி, சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி, வெஜிடபிள் குருமா, வெங்காயச் சட்னி, பால் கொடுக்கப்படுகின்றன.
  • இரவு 9 மணிக்கு - இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டித் தருகின்றனர்.
  • இரவு 11 மணிக்கு - மிளகு மற்றும் மஞ்சளுடன் உப்பு சேர்த்து கொதிக்கவைத்த தண்ணீர் வழங்கப்படுகிறது.

மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சோயா பீன்ஸ் பால் வழங்கப்படுகிறது. அதேபோல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனை சிகிச்சை எனக்கு வேண்டாம் - பாதிக்கப்பட்ட மருத்துவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.