தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்கள் 52 பேர், 15 மண்டலங்களிலும் கரோனா தடுப்பு சிகிச்சை பணிகளுக்காக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுகாதார அலுவலர்கள் உறுதியளித்தபடி, தங்களை பணி நிரந்தரம் செய்யாததால், 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மே மாதம் முதல் சென்னையில் பணியாற்றிவரும் தங்களுக்கு இதுவரையிலும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், பணி நிரந்தர ஆணையும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்கக அலுவலர்களான செல்வவிநாயகம், சித்ரா ஆகியோருடன் ஒப்பந்த செவிலியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் செவிலியர்கள் அனைவரும், அலுவலக வாயிலில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பியபடி தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் குறைக்கப்பட்ட கரோனா பரிசோதனை எண்ணிக்கை!