ETV Bharat / city

மின் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது - கிருஷ்ணசாமி - மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்

மின்சாரத்தைத் தொட்டால் தான் ஷாக் அடிக்கும்; தற்போது மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 22, 2022, 10:14 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் அதிமானோர் கலந்துகொண்டனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் தமிழ்நாடு அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்தும் அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேலானோர் கலந்துகொண்டு மின் கட்டண உயர்வைக் கண்டித்து பல்வேறு வசனங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 'மின் கட்டணத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அனைத்து தரப்பு நிறுவனங்களும் குறைந்தபட்சம் 25% - 35% அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

தேர்தல் வாக்குறுதி என்னானது: முன்னதாக, ஒப்புக்காக மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தினர். ஆனால், கருத்துக்கேட்பில் கூறப்பட்ட எதையும் செயல்படுத்தாமல், மாறாக அவர்கள் என்ன திட்டம் வைத்திருந்தனரோ? அதனை நிறைவேற்றி உள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த எதையும் நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் இப்போது தான் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வரக்கூடிய சூழ்நிலையில், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்தது; தொடர்ச்சியாக மின் கட்டண உயர்வும் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட புதிய தமிழகம் கட்சியினர்

திமுக அடிமை அரசா? மத்திய அரசு சொல்வதை கேட்டதற்காக அதிமுகவை கேள்வி கேட்ட திமுக, தற்போது மத்திய அரசு சொன்ன காரணத்திற்காக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதே, அப்போது திமுக அடிமைக்கு அடிமை அரசா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் நீட் அமல்படுத்த சொல்லி மத்திய அரசு சொல்கிறதே, அதையும் கேட்க வேண்டியது தானே. எனவே உங்களுக்கு சாதகமாக உள்ளதை மட்டும் எடுத்துக்கொண்டு இரட்டை நிலைப்பாட்டில் உள்ளீர்கள்.

மின் கட்டணத்தைத் திரும்பப் பெறுக: இந்நிலையில் மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி முதற்கட்டமாக போராட்டம் நடத்தி இருக்கிறோம். உடனடியாக செய்யவில்லை என்றால், அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். மின் கட்டணம், ஆவின் பொருட்கள் விலை, பால் விலை உயர்வு என மக்களுக்கு எதிரான அனைத்தையும் அரசு செய்து வருகிறது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'என்ஐஏ தமிழ்நாட்டில் நுழையத்தடை விதிக்கவேண்டும்' - எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் முபாரக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.