சென்னை: வங்காள விரிகுடாவில் நவ.9ஆம் தேதி உருவாகும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 11ஆம் தேதி காலை வட தமிழ்நாடு கடலோரப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக உள்ளது.
இதனால், தமிழ்நாடு, ஆந்திரா, ஏனாம் பகுதிகளில் நவம்பர் 10, 11ஆம் தேதிகளில் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நவம்பர் 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று(நவ.8) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன், "தமிழ்நாட்டில் நவ.9,10,11ஆம் தேதிகளில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியில் செல்ல வேண்டாம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே சென்றால் கவனமுடன் செல்ல வேண்டும். மழை நிவாரண பணிகளில் அரசு முழுவீச்சில் செயல்பட்டுவருகிறது. அரசுடன் தன்னார்வலர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபடலாம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி