ETV Bharat / city

கிளப், மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோத செயல்கள்: நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவு

author img

By

Published : Dec 25, 2021, 10:02 AM IST

பதிவுசெய்யப்பட்ட கிளப்கள், சங்கங்கள், ஸ்பாக்கள், மனமகிழ் மன்றங்கள், மசாஜ் சென்டர்கள் ஆகியற்றில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க காவல் துறை எஸ்பி, ஆணையர் தலைமையிலான குழுக்களை அமைக்க டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: காஞ்சிபுரம் படிப்பகம், டென்னிஸ் கிளப் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில், தங்கள் கிளப்பிற்கு வரும் உறுப்பினர்கள் டாஸ்மாக் மதுபான கடைகளிலிருந்து வாங்கிவரும் மதுபானங்களை அருந்துவதாகவும், அதற்காக உரிமம் வாங்க வேண்டுமென அரசு அலுவலர்களும், காவல் துறையும் கட்டாயப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது இடத்தில் மதுபானம் அருந்துவது தடைசெய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், படிப்பகம் மற்றும் டென்னிஸ் கிளப் எனப் பெயர் வைத்துவிட்டு, அந்த நோக்கத்திலிருந்து விலகி பிற செயல்பாடுகளுக்கு அந்த இடம் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டு, மதுபானம் அருந்தும் இடத்திற்கு உரிமம் பெற கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட மறுத்துவிட்டார்.

மேலும், சங்கங்களின் சட்டத்தின்கீழ் பதிவுசெய்த அமைப்புகள் அதன் பதிவு நோக்கிலிருந்து விலகி செயல்பட்டால், அதன் பதிவை ரத்துசெய்வதற்குப் பதிவுத் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பதிவுசெய்யப்பட்ட கிளப்கள், சங்கங்கள், ஸ்பாக்கள், மனமகிழ் மன்றங்கள், மசாஜ் சென்டர்கள் ஆகியவற்றில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றனவா? என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு காவல் துறை எஸ்பி தலைமையில் மாவட்ட அளவிலும், காவல் ஆணையர்கள் தலைமையில் மாநகர அளவிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கும்படி தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அமைந்துள்ள பதிவுபெற்ற சங்கங்கள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதிசெய்யவும், தவறினால் நடவடிக்கை எடுக்கும்படியும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் துறையினருக்கும் தகுந்த அறிவுறுத்தல்களை டிஜிபி நான்கு வாரங்களில் பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: Gold jewellery and money robbery: வீட்டிலிருந்த பெண்களிடம் கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.