ETV Bharat / city

வடசென்னை தேர்தல் அலுவலகத்தில் தேமுதிக விதிமீறல்

சென்னை: வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட 20 பேரை அழைத்துச்சென்று தேர்தல் விதிமீறலில் தேமுதிக ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

dmdk
author img

By

Published : Mar 26, 2019, 5:33 PM IST

தேர்தல் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்யவரும் வேட்பாளர்கள், தங்களுடன் நான்கு பேரை மட்டுமே (வேட்பாளரோடு சேர்த்து ஐந்து பேர்) அழைத்து வர வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.

இந்நிலையில், வடசென்னை தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அழகாபுரம் மோகன்ராஜ், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது, தேமுதிக சார்பில் மாற்று வேட்பாளர் மதிவாணன் மற்றும் தேமுதிக வழக்கறிஞர் பிரிவினைச் சார்ந்தவர்கள் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

ஏற்கனவே, தேர்தல் அலுவலர் திவ்யதர்ஷினி சுயேச்சை வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், முக்கியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு சலுகை காண்பிப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்துவந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்த சம்பவம் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Intro:வடசென்னை நாடாளுமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேமுதிக விதிமீறல்

Body:சென்னை, வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேமுதிக சார்பில் போட்டியிடும் மாற்று வேட்பாளர் மதிவாணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் வாக்குச்சாவடி முகவர்கள் ஆக நியமிப்பதற்காக தேமுதிகவைச் சேர்ந்தவர்களை சுயேச்சை வேட்பாளராக நிறுத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் in அறைக்கு அருகில் உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் வழக்கறிஞர்கள் வேட்புமனுக்களை பூர்த்தி செய்து அளித்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 19ம் தேதி தொடங்கி 22 ந் தேதி வரை பெறப்பட்டது. வேட்புமனு விடுமுறை நாளான 23 மற்றும் 24-ம் தேதி பெறப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று மதியம் 3 மணி வரை வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி திவ்யதர்ஷினி டோக்கன் வழங்கி உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் உள்ளே வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தேமுதிக சார்பில் மாற்று வேட்பாளர் மதிவாணன் மற்றும் தேமுதிக வேட்பாளராக தாக்கல் செய்துள்ள அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோருடன் தேமுதிக வழக்கறிஞர் பிரிவினை சார்ந்தவர்களும் வேட்பாளராக மனு தாக்கல் செய்வதற்கு பத்துக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு அருகில் உள்ள ஆலோசனை அரங்கில் அமர்ந்து வேட்புமனுவில் பூர்த்தி செய்து அளித்தனர்.
வேட்பு மனுக்கள் வாங்கும் இடத்தில் இதனால் 20க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்வதற்காக தேமுதிகவின் நிர்வாகிகள் பேச்சு வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்ஷினி சுயேச்சை வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் நேரத்தில், முக்கிய கட்சியின் வேட்பாளர்களுக்கு சலுகை விலை தொடர்ந்து அளித்து வருகிறார்.
மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நேரமான மாலை மூன்று மணிக்கும் பிறகு அலுவலகத்தில் வாயில் கதவுகள் மூடப்பட்டது. இதனால் அலுவலகத்திற்குள் இருந்தவர்கள் வெளியில் செல்வதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.