ETV Bharat / state

ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து விரைவில் விசாரிக்க உத்தரவு; நீதிமன்றத்தில் அரசு தகவல்! - SCHOOL GIRLS ABUSE

ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து விசாரிப்பது தொடர்பாக விரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2024, 10:20 AM IST

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போலி என்சிசி முகாம் நடத்தியதாக கூறப்படும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரான மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதால், அவர் தரப்பில் இடைக்கால அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மருத்துவரை ஏழு இடங்களில் கத்தியால் குத்திய இளைஞர்.. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பயங்கரம்!

மனுதாரர் சூரியபிரகாசம், “திருச்செந்தூரில் மாணவிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்தார். அதற்கு அரசுத் தரப்பில், “பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க புகார் பெட்டிகள் வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாணவிகள் பாதுகாப்புக்கு குழு அமைக்கப்பட உள்ளது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து காவல் துறையினர் மூலம் விசாரணை நடத்துவது குறித்த உயர் நீதிமன்றம் தெரிவித்த யோசனை தொடர்பாக விரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் குறித்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு புதிய தலைவர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.