சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர்கள் குறித்து தெரிவித்தார்.
இந்தக் குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ராஞ்சி பல்கலைக்கழகம்; டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸை சேர்ந்த நிபுணர் ஜீன் ட்ரெஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.