ETV Bharat / city

வெட்டுக்கிளிகள் தமிழ்நாடு வர வாய்ப்பே இல்லை - ககன்தீப் சிங் பேடி - வெட்டுக்கிளிகள்

சென்னை: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

attack
attack
author img

By

Published : May 30, 2020, 7:47 PM IST

தமிழ்நாட்டில் பாலைவன வெட்டுக்கிளிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ”வடமாநிலங்களை தற்போது தாக்கி வரும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள். இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளது. இது தமிழ்நாட்டிற்கு வருமா என்பது குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கத்தை நமக்கு அளித்துள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக பிகார் போன்ற தெற்கிந்திய பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆய்வின் அடிப்படையில் கூறப்படுகிறது. பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழ்நாடு வருவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வந்தவை, உள்ளூர் வெட்டுக்கிளிகள்தான் என்று தெரிய வந்துள்ளது.

ககன்தீப் சிங் பேடி, வேளாண்துறை முதனமைச் செயலாளர்

தமிழ்நாட்டில் வெட்டுக்கிளிகள் ஊடுருவதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தீயணைப்புத்துறை, வேளாண்துறை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. ஒருவேளை வெட்டுக்கிளிகள் இங்கு வந்தால் கூட அவற்றை அழிக்கத் தேவையான கிருமி நாசினி உள்ளிட்ட மருந்துகளும், இருப்பில் வைக்கப்பட்டுள்ளன “ எனக் கூறினார்.

இதையும் படிங்க: வெட்டுக்கிளிகள் படையெடுப்பு - சிறப்புக்குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.