ஆண்டுக்கு இரு முறை மட்டுமே சூரியன் ஒரு பொருளின் நேர் உச்சிக்கு வரும். அப்போது, அப்பொருளின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அதாவது, அந்தப் பொருளின் நிழல் கீழே தெரிவதில்லை. இந்த நாளே ‘ நிழல் இல்லா நாள்’.
கடந்த ஞாயிறன்று புதுச்சேரியிலும், தமிழ்நாட்டில் விழுப்பும், சேலம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிழலில்லா நாள் வந்தது. அப்பகுதி மக்கள் நிழலில்லா நாளைக் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், இன்று சென்னையில் நிழலில்லா நாள் வந்ததையொட்டி பிர்லா கோளரங்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையொட்டி பல்வேறு தரப்பு மக்களும், செய்முறை விளக்கங்கள் செய்து பார்த்து நிழலில்லா நாளை கண்டுகளித்தனர்.