சென்னை: சசிகலா இணைப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் எந்தவித தவறுமில்லை என்று அதிமுக சிறுபான்மையினர் அணி துணைச் செயலாளராக இருந்த ஜே.எம்.பஷீர் பேட்டியளித்துக்கொண்டிருந்தபோது கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
செய்தியாளர்களிடம் ஜே.எம்.பஷீர் பேசுகையில்,
சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதிமுகவுக்கான வாக்குவங்கி சரிந்தது என்றும், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் வந்த போது சட்டத்திற்கு ஆதரவாக முகம்மது ஜான் எம்.பியை வற்புறுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி எனும் தனிமனிதன் முதலமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காக முகம்மது ஜான் வாக்களித்தார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு ஆறுதல் கூட எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. இன்றைக்கு வந்த திமுக அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இசுலாமியர்களுக்கு துரோகம்
இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி” என்றார்.
பதவி நீக்கம்
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பஷீர் பேசிக்கொண்டிருந்த போது, அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டர். எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் எனச் செய்தியாளர்களிடம் பஷீர் பேசும் அதே நேரத்தில், கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார். நீக்கம் குறித்து தனக்கு கவலை இல்லை என்றும் பஷீர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2020-21பங்கு ஈவுத் தொகை ரூ.155 கோடி - முதலமைச்சரிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு