ETV Bharat / city

’சசிகலாவை சந்திக்கும் திட்டம் இல்லை’ - பிரேமலதா - சசிகலா

சென்னை: கூட்டணி குறித்து தேமுதிகவிடம் கேட்பதைவிட அதிமுகவிடம் கேட்பது தான் சரியாக இருக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

premalatha
premalatha
author img

By

Published : Feb 12, 2021, 3:56 PM IST

தேமுதிக கொடி நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று, கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ”சசிகலாவை சென்று சந்திக்கும் திட்டம் ஏதுமில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகளும் இனி பங்கேற்பார்கள். கூட்டணி பற்றி தேமுதிகவிடம் கேட்பதைவிட அதிமுகவிடம் கேட்பது தான் சரியாக இருக்கும்.

தேமுதிக தனித்துப் போட்டியிட்டாலும் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். பாமகவுடனான அமைச்சர்கள் சந்திப்பு 20% இட ஒதுக்கீடு தொடர்பாகத்தானே தவிர, கூட்டணி தொடர்பாக அல்ல. மேலும், எந்தக் கட்சியிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்க வேண்டும்.

விஜயகாந்தின் உடல்நிலை நன்றாகவே உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். தொண்டர்கள் விரும்பினால் கட்டாயம் வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” என்று கூறினார்.

முன்னதாக, கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியில் வந்து, தேமுதிக கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

இதையும் படிங்க: அதிமுகவை மீட்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது- டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.