ETV Bharat / city

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை - சி.வி.சண்முகம்

author img

By

Published : Jul 3, 2019, 11:54 AM IST

Updated : Jul 3, 2019, 1:08 PM IST

stalin

2019-07-03 11:51:36

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு இனி அனுமதி கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நான்காம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது மன்னார்குடி திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்திற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை. இனியும் விவசாயத்தை பாதிக்கும் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதிக்காது. இதுபோன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு அனுமதி அளிக்காது. 

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது திமுக தான். அப்போது மத்திய அமைச்சராக இருந்தவர் டி.ஆர்.பாலு என்று தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தது அதிமுக அரசு என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு திமுக சார்பில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமானது வெறும் ஆய்வுக்காக மட்டுமே. திமுக அனுமதி அளித்தது என பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாநில அரசுக்கு உரிமை கிடையாது. மத்திய அரசுக்குதான் உரிமை உள்ளது என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், ஆய்வுக்கு திமுக அனுமதி வழங்கியதே தவறு என்றும், அனுமதி கூட வழங்கக் கூடாது என்பதுதான் அதிமுக அரசின் முடிவு எனவும் தெரிவித்தார். 

பின்னர், தமிழ்நாடு அரசு அனுமதி தராவிட்டாலும் மத்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது. அதை எதிர்க்கவே மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். 
 
Intro:Body:

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு இனி அனுமதி கிடையாது என சட்டத்துறை அமைச்சர் பேச்சு.

Conclusion:
Last Updated : Jul 3, 2019, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.