ETV Bharat / city

தொல்லியல் அலுவலர் பதவிக்கு வெளிமாநிலத்தவர் யாரும் தேர்வுசெய்யப்படவில்லை - தேர்வாணையம் தகவல்! - மிழ் வழியில் படித்த மாணவர்கள்

சென்னை : தொல்லியல் அலுவலர் பதவிகளுக்கான தேர்வில் வெளிமாநிலத்தில் இருந்து யாரும் தேர்வு செய்யப்படவில்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No outsider has been selected for the post of Archaeological Officer - tnpsc
தொல்லியல் அலுவலர் பதவிக்கு வெளிமாநிலத்தவர் யாரும் தேர்வுசெய்யப்படவில்லை - தேர்வாணையம் தகவல்!
author img

By

Published : Dec 31, 2020, 7:57 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “18 தொல்லியல் அலுவலர் பதவிக்கான தேர்வில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானதாகும். தொல்லியல் அலுவலர் பதவிக்கான தேர்வுகள் 2020 பிப்ரவரி 29 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கு டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வின் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

இந்தப் பதவிக்கு முதுகலை தமிழ், வரலாறு, தொல்லியல் படிப்புகள் மற்றும் தொல்லியலில் முதுகலை பட்டயப் படிப்புடன் இளங்கலை தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்பது கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

No outsider has been selected for the post of Archaeological Officer - tnpsc
தொல்லியல் அலுவலர் பதவிக்கு வெளிமாநிலத்தவர் யாரும் தேர்வுசெய்யப்படவில்லை - தேர்வாணையம் தகவல்!

அத்துடன், தேர்வு எழுதிய மாணவர்களின் கல்வித்தகுதி, இட ஒதுக்கீடு விதிகள், போட்டி தேர்வில் பெற்ற மதிப்பெண், அவர்கள் தொடர்புடைய மூலச் சான்றிதழ்களை சரிபார்த்து அவற்றின் அடிப்படையில் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்ச்சிப் பெற்ற பதினெட்டு மாணவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாவர். இந்த 18 மாணவர்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதுகலை பட்டப் படிப்பினை பெற்றுள்ள மாணவி ஒருவரும் அடங்குவார்.

பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளிப்பதாகவும், தமிழ்நாட்டடு மாணவர்கள் புறக்கணிப்பட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல் உண்மைக்குப் புறம்பானதாகும். மேலும், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : போலி மருத்துவரால் பார்வையை இழந்த பெண்: மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.