ETV Bharat / city

கிலோ 45 ரூபாய் வெங்காயம் காலி; பொதுமக்கள் அவதி! - பெரிய வெங்காயம்

சென்னை: பண்ணை பசுமைக் கடையில் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெரிய வெங்காயம் விற்றுத் தீர்ந்ததால் கால் கடுக்க காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

fresh
fresh
author img

By

Published : Oct 23, 2020, 9:58 AM IST

ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் கடும் மழை காரணமாக பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை அதிகரித்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் சந்தையில் விற்கப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு பெரிய வெங்காய விற்பனையை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தட்டுப்பாடின்றி மக்கள் வெங்காயத்தை வாங்கிச் செல்லலாம் எனக் கூறினார்.

இதையடுத்து நேற்று(அக்.22) தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமைக் கடையில், மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பெரிய வெங்காயத்தை, கிலோ 45 ரூபாய்க்கு வாங்கிச்சென்றனர். ஒருவருக்கு இரண்டு கிலோ மட்டுமே வழங்கப்பட்ட வெங்காயத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கினர்.

கிலோ 45 ரூபாய் வெங்காயம் காலி; பொதுமக்கள் அவதி!

ஆனால் சிறிது நேரத்திலேயே வெங்காயம் முழுவதும் விற்றுப் போனதால் மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது, இறக்குமதி செய்யப்பட்ட 4,900 கிலோ வெங்காயமும் விற்று தீர்ந்து விட்டதாகத் தெரிவித்தார். அனைத்து காய்கறிகளையும் பண்ணை பசுமை கடைகளில் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும், அப்போதுதான் இதுபோன்று இன்னலுக்கு ஆளாகாமல் இருக்க முடியும் என குறைந்த விலையில் வெங்காயம் வாங்க வந்து, வெறுங்கையுடன் திரும்பியவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.