ETV Bharat / city

’வரும் தேர்தலில் 100% ரஜினி ஆதரவு யாருக்குமில்லை’ - ரஜினி மக்கள் மன்றம்

சென்னை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் 100% யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டார் என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அதன் நிர்வாகி சுதாகர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

fans
fans
author img

By

Published : Feb 6, 2021, 4:56 PM IST

அரசியலுக்கு தான் வரவில்லை என்பதை ரஜினிகாந்தே உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுகவில் இணையத் தொடங்கியுள்ளனர். அதேபோல், நிர்வாகிகள் அவரவர் விருப்பப்படி எந்தக் கட்சியிலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து ஆதரித்து வந்த துக்ளக் இதழ், மாற்று கட்சியில் இணையும் ரஜினிகாந்த் ரசிகர்களை கடுமையாக விமர்சித்திருந்தது.

இதேபோல் உண்மையான ரஜினி ரசிகர்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியனும் தெரிவித்திருந்தார். அதோடு, ரஜினி தொடங்காத கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட அர்ஜுனமூர்த்தியும், விரைவில் தான் கட்சி தொடங்கவுள்ளதாகவும், ரஜினி தான் எப்போதும் எனக்கு தலைவர் எனவும் கூறியிருந்தார்.

அரசியலே வேண்டாம் என ரஜினிகாந்த் ஒதுங்கியிருந்தாலும், அவரைப் பற்றியும், சுற்றியும் பல்வேறு அரசியல் சார்ந்த நிகழ்வுகள் நடந்தவண்ணமே இருக்கின்றன. இது ஒருவகையில் அவருக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அவரது நலம் விரும்பிகளும் கருதுகின்றனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று, அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தொலைபேசி தொடர்பு கொண்டு, "நடிகர் ரஜினிகாந்த் 100% வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டார். மேலும் அர்ஜுன மூர்த்தி தொடங்கவுள்ள கட்சிக்கும் ரஜினிகாந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ரஜினிகாந்த் மனைவி லதா கட்சி தொடங்கவுள்ளதாக வரும் செய்திகள் பொய்யானது" எனத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியபோது, தொடர்ந்து ரஜினியின் பெயரை பயன்படுத்தி செய்திகள் வெளிவருவதால், குழப்பத்தை தவிர்க்கவே சுதாகரால் தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சசிகலா வரவேற்று பேரணி : முன்னாள் அமைச்சரின் மனு நிராகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.