சென்னை: கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 பேருக்கு மேல் அனுமதியில்லை, கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்து அறநிலையத் துறை ஆணையர் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் ’’கரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு திருக்கோயில்களில் பின்பற்றபட வேண்டிய நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வகுத்து பின்வருமாறு கடைபிடிக்க வேண்டும்.
மேலும், நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரவு 8 மணிவரை மட்டுமே பக்தர்களை அனுமதிக்க வேண்டும். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடந்த அனுமதி இல்லை. திருக்கோயில்களில் திருமண மண்டபத்தில் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்தப்பட வேண்டும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதித்து தகுந்த இடைவெளியைக் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதியில்லை, கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளையும் தவறாது கடைபிடிக்க அனைத்து சார்நிலை அலுவலர்களிடமும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா விதிகளைப் பின்பற்றவில்லை: நாள்தோறும் 500-700 பேர் மீது வழக்குப்பதிவு