சென்னை: சுஜாதா பயோடெக் நிறுவனர் சி.கே.ராஜ்குமார் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (அக். 07) மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த சுஜாதா பயோடெக் நிறுவனர் சி.கே.ராஜ்குமாருக்கு வயது 68. அவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை (அக். 8) காலை 9 மணிக்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிவாரன் 90, வெல்வெட் ஷாம்பூ ஆகியவற்றைத் தயாரிக்கும் சுஜாதா பயோடெக் நிறுவனத்தை நிறுவிய சி.கே.ராஜ்குமார், பிரபல சி.கே. வணிக குழுமத் தலைவரான சின்னி கிருஷ்ணனின் மகனாவார். மருத்துவரான இவர் நிவாரன் 90, நியாபக மறதிக்கு மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை கண்டுபிடித்துள்ளார்.
அண்மையில் இவரும் இவரது ஊழியர்கள் குழுவும் சேர்ந்து கரோனா தொற்றுக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.