ETV Bharat / city

முதுகலைப்படிப்பில் சேர 9,114 பேர் முதல் நாளிலேயே பதிவு - கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலைப் படிப்பில் சேர்வதற்கு முதல் நாளிலேயே 9,114 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

முதுகலை படிப்பில் சேர 9,114  பேர் முதல் நாளிலேயே பதிவு

author img

By

Published : Sep 7, 2022, 9:56 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப்பாடப்பிரிவில் உள்ள 24,341 இடங்களில் சேர்வதற்கு இன்று ( செப்.7ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து முதுகலைப் பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasapg.in இணையதளத்தில் இன்று முதல் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியிடப்பட்டு 21ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதுகலை கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே மாலை 6:00 மணி வரை 9, 114 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 4,769 மாணவர்கள் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பக்கட்டணத்தை 3,235 மாணவர்கள் செலுத்தி உள்ளனர் என கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்பு.. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.