சென்னை: குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல் வழியாக கடத்த முயன்ற ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதை பொருள் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த மச்சாவரம் சுதாகர், துர்கா, ராஜ்குமார் உள்பட 8 பேர் வருவாய் நுண்ணறிவு பிரிவு (DRI) அலுவலர்களால் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில், பல நாடுகளின் தொடர்பு இருப்பதால் வழக்கு விசாரணை என்.ஐ.ஏ-விற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாங்காடு காவல் எல்லையில் உள்ள கொளப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மச்சாவரம் சுதாகர் என்பவரது வீடு, வாகனங்களில் ஆகியவற்றில் 10க்கும் மேற்பட்ட டெல்லி தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றம்