ETV Bharat / city

கூவம் ஆற்றில் மணல் திருட்டு: ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: மெரினா அருகே கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில், சட்டவிரோதமாக மணல் திருடப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

national green tribunal
தேசிய பசுமை தீர்ப்பாயம்
author img

By

Published : Sep 15, 2021, 5:51 PM IST

சட்டவிரோத மணல் திருட்டு

சென்னையில் கூவம் ஆறு கடலில் கலக்கக்கூடிய மெரினா கடற்கரையின் முகத்துவாரத்தில் இரவு, அதிகாலை நேரங்களில் லாரிகள் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகவும், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்துக்கு ஒட்டிய பகுதியில் செல்லும் சிறிய பாதை வழியாக இந்த மணல் லாரிகள் கூவம் ஆறு கடலில் கலக்கக் கூடிய முகத்துவாரம் வரை சென்று சட்டவிரோதமாக மணல் அள்ளிச் செல்வதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த மீனவர் தந்தை கே.ஆர். செல்வராஜ் குமார், மீனவர் நல சங்கம் சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆய்வு செய்ய குழு அமைப்பு

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு, மணல் திருட்டு நடந்த முகத்துவாரப் பகுதியை ஆய்வு செய்ய, சென்னையில் உள்ள மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த மூத்த அலுவலர், தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த மூத்த அலுவலர், சென்னை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர், சென்னைக் மாநகர காவல் ஆணையாளர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.

விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மேலும், சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து, மணல் திருடப்பட்டுள்ளதா, லாரி, ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் உள்ளே சென்று மணல் அள்ளப்பட்டுள்ளதா எனவும், இவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள், பாதிப்புக்கான இழப்பீடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கடத்தப்பட்ட மணலை பயன்படுத்தியவர்கள் நபர்கள் ஆகியன குறித்தும், இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு குழுவுக்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை வரும் அக்டோபர் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இதையும் படிங்க: ஒரே பாஸ் மூலம் பலமுறை மணல், கற்களை ஏற்றிச் சென்றால் லைசென்ஸ் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.