இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது, இதனால் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சித்தார், புத்தான் அணைக்கட்டு பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.