தமிழ்நாட்டில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றின் வீரியம் குறைந்துள்ள நிலையில், இன்று (செப். 1) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கையாண்டு, பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளை அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மேற்கொண்டுவருகின்றன.
மதுபானங்களின் விலை உயர்வு
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்றுமுதல் (செப். 1) உயர்வதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் தேவையில்லை
பள்ளி செல்லும் மாணவர்களுக்குப் பேருந்து பயண அட்டை வழங்கும் வரை, பள்ளி சீருடையுடனோ அல்லது பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையைக் காண்பித்தோ இன்றுமுதல் இலவசமாகப் பயணிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் திறப்பு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் இன்றுமுதல் வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்க இடைக்காலத் தடை
தெலங்கானாவில் பள்ளிகள் திறப்பதாக அறிவித்த அரசின் முடிவை பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்த்தனர். இதனால், தற்போது தெலங்கானாவில் பள்ளிகளை திறக்க அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
மழை பெய்யக்கூடம் இடங்கள்
தென்மேற்குப் பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.