உரிமை மீறல் வழக்கு தீர்ப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்தது தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் 21 பேர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 25) தீர்ப்பு வழங்குகிறது.
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்:
கரோனாவால் உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 2 மணிநேரம் கடைகள் அடைத்து டாஸ்மாக் ஊழியர்கள் இன்று (ஆகஸ்ட் 25) போராட்டம் நடத்த உள்ளனர்.
புதுச்சேரியில் முழு ஊரடங்கு:
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 26) காலை 6 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று விற்பனையை தொடங்குகிறது சாம்சங் புதிய மாடல்:
சாம்சங் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5 ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் இன்று (ஆகஸ்ட் 25) இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன.