சென்னை: அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் எல்லையம்மன் நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் சந்தியா(22). பி.காம் பட்டதாரியான இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக கோச்சிங் சென்டர் ஒன்றில் படித்து வந்தார். இவருக்கும் சேலத்தைச் சேர்ந்த ராஜா(26) என்பவருக்கும் 2020ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பெற்றோர் விருப்பப்படி பதிவு திருமணம் நடந்தது. இருப்பினும் சேர்ந்து வாழவில்லை. இதனிடையே சந்தியாவுக்கும் ஆவடியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இதனைச் சந்தியா தனது பெற்றோரிடம் தெரிவித்தும் அவர்கள் மறுப்பு தெரிவித்துவந்தனர். இதையடுத்து, கடந்த மார்ச் 4ஆம் தேதி ராஜா-சந்தியா இருவருக்கும் சேலத்தில் முறைப்படி திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் ஒன்றாக கொரட்டூர் திரும்பி, கணவன் மனைவியாக வாழ்க்கையைத் தொடங்கினர்.
இந்த நிலையில் மார்ச் 7ஆம் தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மார்ச் 9ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை தரப்பில், சந்தியாவுக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி ஒரு வாரத்தில், உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்