ETV Bharat / city

சென்னையில் தயாரிக்கப்பட்ட யமஹா கீபோர்டுகள் அறிமுகம்!

author img

By

Published : Sep 20, 2019, 10:57 PM IST

சென்னை: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று யமஹா நிறுவன கீபோர்டுகள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

keyboard

குழந்தைகள், புதிதாக இசை கற்கும் இளைஞர்களுக்கு ஏற்ற மூன்று புதிய வகை சிறிய கீபோர்டுகளை யமஹா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இவை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது இவற்றின் தனிச் சிறப்பாகும். அதிலும் குறிப்பாக இவை சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது இன்னும் சிறப்பு.

புதிய சீரிஸ் மாடல் கீபோர்டுகளில் PSS-E30, PSS- F30, PSS-A50 ஆகியவை இன்று சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில்PSS-E30, PSS- F30 ஆகிய இரண்டு மாடல்களும் குழந்தைகளை மையப்படுத்திய சிறிய ரக கீ-போர்டுகள் ஆகும். PSS-A50 கீபோர்டு இசைக்கருவி புதிதாக இசை பயிலும் இளைஞர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். இவை சிறிய ரக கீபோர்டுகளாக இருந்தாலும் சாதாரண ஸ்டாண்டர்ட் கீபோர்டுகளில் உள்ள அனைத்து வசதிகளும், அதே தரமும் இவற்றில் உள்ளதாக யமஹா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

keyboard
கீபோர்டு வாசித்த லிடியன் நாதஸ்வரம்

இந்த அறிமுக நிகழ்ச்சியில் சிறு வயது முதலே பியானோ வாசித்து உலகை பிரமிப்பில் ஆழ்த்திய லிடியன் நாதஸ்வரம் கலந்துகொண்டு புதிய மாடல்களை வாசித்துக் காட்டினார்.

மேலும் படிக்க: விஜய் ஆண்டனியால் ஒன்றிணைந்த இசைஞானியும் எஸ்.பி.பி.யும்

Intro:
சென்னையில் தயாரிக்கப்பட்ட மூன்று வகை கீபோர்டு கருவியை யமஹா நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது.

Body:
குழந்தைகள் மற்றும் புதிதாக இசை கற்கும் இளைஞர்களுக்கு ஏற்ற மூன்று புதிய வகை சிறிய கீபோர்டுகளை யமஹா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இவை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது இவற்றின் தனிச் சிறப்பு குறிப்பாக இவை சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை. புதிய சீரிசான பிஎஸ்எஸ் மாடல் கீபோர்டுகளில் PSS-E30, PSS- F30, PSS-A50 ஆகிவற்றை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதில்PSS-E30, PSS- F30 ஆகிய இரண்டு மாடல்களும் குழந்தைகளை மையப்படுத்திய சிறிய ரக கீ போர்டுகள் ஆகும். PSS-A50 புதிதாக இசைக்கருவியை பயிலும் இளைஞர்களை மையப்படுத்திய மாடல் ஆகும். இவை சிறியரக கீபோர்டு களாக இருந்தாலும் சாதாரண ஸ்டாண்டட் கீபோர்டு களில் உள்ள பெரும்பாலான வசதிகளும் அதே தரமும் இவற்றில் உள்ளதாக யமஹா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் சிறு வயது முதலே பியானோ வாசித்து உலகை பிரமிப்பில் ஆழ்த்திய லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டு புதிய மாடல்களை வாசித்துக் காட்டினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.