சென்னை: கரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர், அறிகுறிகள் உள்ளோருக்கு தலா 2,500 ரூபாய் மதிப்பில், 'அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு தொகுப்பு' வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு பல்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மூலம் சலுகை விலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா பாதித்தோர், அறிகுறிகள் உள்ளோருக்கு 2,500 ரூபாய் மதிப்பில் 'அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு தொகுப்பு வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.
'கூட்டுறவுத் துறையில் யார் தவறு செய்தாலும் தப்பமுடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு
இந்தத் திட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கான தொகுப்பாக, ஒரு பல்ஸ் ஆக்சிமேட்டர் கருவி, ஒரு டிஜிட்டல் தெர்மா மீட்டர் கருவி, 14 முகக் கவசங்கள், ஒரு கை கழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுரக் குடிநீருக்கான பொடி அடங்கிய பாக்கெட்டுகள், 60 அமுக்ரா சூரண மாத்திரைகள், 14 வைட்டமின்-சி மாத்திரைகள், 14 ஜின்க் மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகள், கோவிட் கையேடு ஆகியவை அடங்கிய பெட்டகம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அதேபோல, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையத்தையும், சுகாதாரத்துறை சார்பில், 4 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 17ஆம் தேதி முதல் உடனுக்குடன் இ-பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 80 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கும், கடலூர் மாவட்டம், தொழுதூர் கிராமத்தில் 3 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். மருத்துவத் துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.