ETV Bharat / city

டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு; வெளியான புதிய தகவல் - தேர்வு முடிவுகள் எப்போது?

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு
டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு
author img

By

Published : May 17, 2022, 9:03 PM IST

Updated : May 17, 2022, 11:08 PM IST

சென்னை: டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத்தேர்வு (Preliminary exam) ஜனவரி 3ஆம் தேதி, 2021ஆண்டில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய இந்த தேர்வில் ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம்பேரின் பதிவு எண்களை இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த மே 04ஆம் தேதி 2022, இந்த முதன்மைத்தேர்வினை சென்னையில் அமைக்கப்பட்ட 37 மையங்களில் 3687 பேர் எழுதினர். இந்த குரூப் 1 தேர்வின் முதன்மைத்தேர்வு(Mains Examination)க்கான விடைத்தாள்கள் திருத்துவதில் 90 சதவீதம் பணிகள் முடித்துள்ளது என்றும்; இந்த மாதம் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஸ்சியின் தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் குரூப் 2 தேர்வு குறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ‌

அதன்படி, இத்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மெயின் தேர்வுக்குப் பின், நேர்முகத் தேர்வு (Interview) நடைபெறும். இதன் தொடர்ச்சியாக தகுதி உடையவர்களுக்கு துணை ஆட்சியர், டி.எஸ்.பி., உள்ளிட்ட காலியாக உள்ள 66 இடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குரூப் 2 தேர்வின் போது மாஸ்க் கட்டாயம் இல்லை- டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

Last Updated : May 17, 2022, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.