ETV Bharat / city

புதிய கல்விக் கொள்கையை திருத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் - அன்புமணி

சென்னை: மத்திய அரசு நேற்று (ஜூலை 29) வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையை திருத்தி எழுத வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

anbumani
anbumani
author img

By

Published : Jul 30, 2020, 1:35 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைக் கட்டுப்படுத்தவும் தான் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய அம்சமே எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது தான். ஆனால், மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையில், 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

அதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது. உயர்கல்விக்கான ஒழுங்குமுறைகள் பெரும்பாலும் தனியாருக்கு சாதகமானவையாக இருப்பதால், உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அரசு விலகிக் கொள்ளுமோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல அம்சங்கள் இருந்தாலும், பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களும் ஏராளமாக உள்ளன. எனவே, பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை நீக்கி, புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு தேவையான திருத்தங்களைச் செய்து வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, 1964ஆம் ஆண்டின் கோத்தாரி ஆணைய அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான அம்சங்களை இதில் சேர்க்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கல்விக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.