சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின்கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தங்கள் மீது குற்றச் செயல் ஏதும் இல்லை எனக் காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
”மாற்றுத்திறனாளிகள் இயக்குநரகக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்குப் பராமரிப்பு, பாதுகாப்பு, கல்வி, பயிற்சி, மறுவாழ்வளித்தல், இதர செயல்பாட்டினை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மீது குற்றச் செயல் ஏதும் இல்லை எனக் காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற வேண்டும்.
அதன் அசலினை தங்கள் நிறுவனத்திலும் அதன் நகலினை தங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடமும் ஒப்படைக்க வேண்டும்.
தகுந்த சான்றிதழ்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் சரிபார்த்துப் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!