ETV Bharat / city

சத்தம் போட்டு காட்டிக்கொடுக்கும் சிசிடிவி கேமரா! - Tamil latest news

சென்னை: தகுந்த இடைவெளி முகக்கவசம் அணியாதவர்களை கண்டுபிடிக்க சிசிடிவி கேமராவில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா
author img

By

Published : Jun 6, 2020, 2:18 AM IST

சென்னை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் தகுந்த இடைவெளி பின்பற்றாதவர்களை கண்காணித்து தெரியப்படுத்தும் நவீன கண்காணிப்பு கேமரா ஒன்றை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உருவாக்கியுள்ளார்.

இதனை ஐஐடி தொழில் முனைவோர் மையத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் இயங்கக்கூடியதாக வடிவமைத்துள்ளார்.

இக்கருவி ஒரு மீட்டருக்கும் குறைவாக அதாவது தகுந்த இடைவெளி கடைபிடிக்காத நபர்கள், முகக்கவசம் அணியாத நபர்கள் ஆகியோரை வேறுபடுத்துவதுடன் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும். அப்போது சப்தம் எழுப்பி தெரியப்படுத்தும்.

இந்த நவீன கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளை கேட்டறிந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அதனை தனது அலுவலகத்தில் பொருத்த அனுமதி அளித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.