ETV Bharat / city

நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடியைத் தடுக்க மு.க. ஸ்டாலின் புது வியூகம்

கோவையில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர்கள் தென் மண்டல மாநாட்டில் பேசிய முதலமைச்சர், பொருளாதார குற்றப்பிரிவு, ஊழல் தடுப்புப் பிரிவில் நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடியைத் தடுக்க புதிய தணிக்கை பிரிவு தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் புது வியூகம்
ஸ்டாலின் புது வியூகம்
author img

By

Published : Nov 19, 2021, 7:58 PM IST

கோயம்புத்தூர்: இந்திய பட்டயக் கணக்காளர்கள் தென் மண்டல மாநாடு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பட்டய கணக்காளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், இணையதளம் வாயிலாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பட்டய கணக்காளர் மாநாடு
பட்டய கணக்காளர் மாநாடு

நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறீர்கள்

  • நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதிலும் வடிவமைப்பதிலும் பெரும் பங்காற்றும் @theicai அமைப்பின் 53-ஆவது மண்டலக் கருத்தரங்கைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கிவைத்து, சமுதாயத்திற்கு நிதி ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் நற்பணியைத் தொடர்ந்து ஆற்றுங்கள் எனக் கேட்டுக்கொண்டேன். pic.twitter.com/M6lLY6cAGN

    — M.K.Stalin (@mkstalin) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போது மாநாட்டில் பேசிய அவர், "53ஆவது மண்டல கருத்தரங்கில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்மண்டல கவுன்சில் வரலாற்றில் முதல் முறையாக 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது சிறப்பு வாய்ந்தது.

மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் உள்ளதால் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியவில்லை, நிதித்துறை, கணக்கு தணிக்கையோடு உங்கள் பணி நின்றுவிடாது, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறீர்கள்.

பட்டய கணக்காளர் மாநாடு

பொருளாதார பாதுகாப்பாளர்

பொருளாதாரத்தை வடிவமைப்பதில் பட்டய கணக்காளர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். பொருளாதார குற்றப்பிரிவு ஊழல் தடுப்பு பிரிவில் நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடியைத் தடுக்க புதிய தணிக்கை பிரிவுவை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது.

பட்டய கணக்காளர் மாநாடு
பட்டய கணக்காளர் மாநாடு

அரசின் கவனத்திற்கு..

இதில் முக்கிய ஆலோசனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் உடனடியாக செயல்படுத்தலாம்.

பட்டய கணக்காளர்கள் வெறும் கண்காணிப்பாளராக அல்லாமல், பொருளாதார பாதுகாப்பாளராக உள்ளீர்கள்" என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் புது வியூகம்
ஸ்டாலின் புது வியூகம்

மக்களைக் காக்கவும் உதவி

இதனைத்தொடர்ந்து காணொலி வாயிலாக உரையாற்றிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்டய கணக்காளர்கள் தங்களுடைய கடமையை உணர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இவர்கள், மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் மோசடி நிறுவனங்களிலிருந்து மக்களைக் காக்கவும் பட்டய கணக்காளர்கள் உதவி செய்து வருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’மரியாதை தரவில்லை, மனைவியைப் பற்றி பேசுகிறார்கள்...’ - சட்டப்பேரவையில் உடைந்து அழுத சந்திரபாபு நாயுடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.