ETV Bharat / city

நீட் விலக்கு மசோதா ரிப்பீட்டு - விரைவில் சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம் - நீட் எதிர்ப்பு மசோதா மீண்டும் உருவாக்கம்

நீட் எதிர்ப்பு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதென, அரசியல் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

நீட் எதிர்ப்பு மசோதா மீண்டும் உருவாக்கம்; சட்டமன்ற சிறப்புக் கூட்டம்

author img

By

Published : Feb 5, 2022, 2:45 PM IST

Updated : Feb 5, 2022, 7:10 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவது தொடர்பான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப். 5) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் க. பொன்முடி, இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கு. செல்வப்பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வீ.பி. நாகைமாலி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஏ.ஆர். ரகுராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எம். சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனைத்துக் கட்சிக்கூட்டம்

அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டு ஆலோசனை

முதலில், மு.க. ஸ்டாலின் உரை ஆற்றினார். பின்னர் மா. சுப்பிரமணியன், நீட் தேர்வு விலக்கு தொடர்பான வரைவுத் தீர்மானத்தினை முன்மொழிந்தார்.

இதையடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்தார்கள். பின்னர், தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம் கூடி இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என இந்தச் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்போம் - ஓபிஎஸ்

Last Updated : Feb 5, 2022, 7:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.