ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார அமைப்பு மற்றும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, ஆன்லைன் எனப்படும் இணையவழிக் கல்வி குறித்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டு கையேட்டினை வெளியிட்டுள்ளது.
அதில், நாடு முழுவதும் தற்போது மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படும் சூழலில், அதிக நேரம் மாணவர்கள் அலைபேசி, கணினி உள்ளிட்ட மின்னனு சாதனங்களை பயன்படுத்துவதாகவும், இதனால், மாணவர்கள் இணையம் வாயியாக அச்சுறுத்தலுக்கு ஆளாகும் சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் மனநலம் மற்றும் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதின்ம வயது மாணவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு, தவறான பாதைக்கு அவர்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவைகளை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,
- ஆன்லைன் கணக்கு மற்றும் பாஸ்வேர்டை பிறர் அறிய முடியாத வகையில் வைத்திருக்க வேண்டும்.
- தெரிந்த நபர்களுடன் மட்டுமே தொடர்பில் இருக்க வேண்டும்.
- ஆன்லைன் கணக்கு பிறரால் முடக்கப்பட்டது தெரிந்தாலோ, அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டாலோ, சைபர் புல்லிங் குற்றங்களை தடுக்கும் 112 என்ற காவல் உதவி எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும்.
- ஆன்லைனில் தங்கள் வயது, முகவரி, தொலைபேசி எண், பள்ளியின் பெயர் ஆகியவற்றை தெரிவிக்கக்கூடாது.
- வன்முறையை தூண்டக் கூடிய மற்றவரின் உணர்வுகளை காயப்படுத்தும் பதிவுகளை பதிவேற்றக்கூடாது.
- மாணவர்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொடர்புகளை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. காவல் உதவி எண் 112, குழந்தைகள் உதவி எண் 1098, ட்விட்டர்.. @CYBERDOST.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு ஹால் டிக்கெட், முகக்கவசம் வழங்கிய தலைமை ஆசிரியர்